Friday, December 18, 2009

நீ இல்லை நான் இல்லை

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதிலெல்லாம் களவு போக வழியில்லை(From 7G)
தேன் இல்லாத மலரிலெல்லாம் வண்டு போக வழியில்லை
உன் மனதில் ஈரம் இல்லையென்றால் நானும் போக வழியில்லை
உரசாத கற்களிலெல்லாம் தீ வர வழியில்லை
நாம் பழகாவிட்டால் நீ என்னை புரிந்து ளொள்ள வழியில்லை
தண்ணீர் இல்லாத மீன்கள் எல்லாம் உயிரோடு இருப்பதில்லை
நீயும் இங்கு இல்லையென்றால் நான் வாழ்வதில் அர்த்தமில்லை

காதல் மலர்ந்தது


உன்னை முதன்முதல் சந்தித்தபோது
ஒன்றும் தோன்றவில்லை
உன்னை சிலமுறை சந்தித்தபோது
ஏதோ ஒன்று தோன்றியது
உன்னை பலமுறை சந்தித்தபோது
காதல் தோன்றியது

உயிரிலே கலந்து

நீ என்னை விட்டு விலகி செல்லும் போது
தான் நான் உணர்கிறேன்
நீ என் நினைவினில் மட்டும் அல்ல என்
உயிரிலும் கலந்து இருக்கிறாய்

அருந்ததி


நீயும் நானும் இரண்டு கண்கள் போல்
நம் பார்வை ஒன்றுதான்
நீயும் நானும் இரண்டு கால்கள் போல்
நம் பயணம் ஒன்றுதான்
நீயும் நானும் இரண்டு கைகள் போல்
நம் ஓசை ஒன்றுதான்
இப்படி,
நீயும் நானும் இரண்டாக இருந்தாலும்
நாம் ஒன்றுதான்

Thursday, December 17, 2009

அலைகள் ஒய்வதில்லை


துள்ளி திரிந்த அலை போல் இருந்த காலத்தில்
என் மனதில் அமைதி இருந்தது
ஆழ் கடல் போல் அமைதியாக இருக்கும் காலத்தில்
என் மனதில் பெரும் அலை அடிக்கிறது

நிலவு தந்த பாடம்


பௌர்ணமி என்று நினைத்து நான் இங்கு வந்தேன்
தேய்பிறையை மறந்துவிட்டு
தேய தேய பௌர்ணமி வரும் என்று நினைத்தேன்
அமாவாசையை மறந்துவிட்டு
அமாவாசை அன்று கதறி கதறி அழுதேன்
வளர்பிறையை மறந்துவிட்டு
வளர வளர நான் இன்று உணர்கிறேன் வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும் நிறைந்தது என்று

சுமைதாங்கி


10 மாதம் உன் வயிற்றில் சுமக்கிறாய்
20 வருடம் உன் மனதில் சுமக்கிறாய்
இறுதி வரை சுமைதாங்கியாக இருப்பாயோ
எப்படி இச்சுமை சுகமாகிறது
பாசத்தால் மட்டும் தானோ

பொய் இன்று உண்மை


பொய் என்று நினைப்பது எல்லாம் உண்மை
உண்மையை நினைத்தால் எல்லாம் துன்பம்
நீ உன் துன்பத்தை மறைத்தாலும்
உண்மை ஓர் நாள் வெளிப்படும்
அந்த உண்மை பொய்யாகுமா

சாதிக்க பிறந்தவன்


கண் இமைக்கும் நேரத்தில்
உலகம் எங்கோ செல்ல
கண் திறக்கும் நேரத்தில்
உலகத்தில் நான் எங்கோ நிற்க
கண்களால் பார்க்கும் போது
வியப்பு அடைந்துவிட்டேன்
கண் இல்லாதவன் கூட அவன்
வாழ்வில் தெளிவாய் இருப்பதை பார்த்து

சூழ்நிலையைச் சுற்றி

உன் கண்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறேன்
உன் செவிக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் செவிக்கு என் மௌன மொழி தருகிறேன்
உனக்கே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன்னையே விட்டு விலகி செல்கிறேன்
ஆனால்,
உன் சூழ்நிலைக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்
இதற்கு நான் என்ன செய்வது

வாழ்த்துக்கள்


வானத்தை மேகங்கள் மூடலாம்
மலர்களை இலைகள் மூடலாம்
சிப்பிகளை கடல்கள் மூடலாம்
ஆனால்,
என் வார்த்தைகளை மௌனத்தால் மூட முடியாமல்
இன்று மனம் திறந்து உன்னை வாழ்த்துகிறேன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

தண்ணீர் தாயே


திருச்சி மாநகரத்துக்கு அழகை கூட்டும் உனக்கு
3 வருடம் கழித்து தான் என் ஏக்கம் என்னவென்று புரிந்ததோ
மக்களின் தாகத்தை தீர்க்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் தாகம் என்னவென்று புரிந்ததோ
வறட்சியை போக்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் வறட்சி என்னவென்று புரிந்ததோ
நீ வரும் வழி எல்லாம் என் விழிகள் இருக்கின்றது
நீ வந்த நாள் தான் என் விழிகளுக்கு திருவிழா
உன்னை நான் பணிவோடு வணங்குகிறேன்
என் தண்ணீர் தாயே!!!

அம்மா


நான் 10 வயதில் ஒரு ஆடையைக் கேட்டேன்
நீ வாங்கி தர முடியாது என்றாய்
நான் 13 வயதில் நீச்சல் குளம் போக கேட்டேன்
நீ போகக் கூடாது என்றாய்
நான் 16 வயதில் miniskirt கேட்டேன்
நீ போட கூடாது என்றாய்
நான் 19 வயதில் mobile கேட்டேன்
நீ வாங்க கூடாது என்றாய்
இப்படி,
நான் கேட்டதை எதையும் தராத நீ
ஏன் நான் கேட்காமலே அன்பை மட்டும் வாரி வாரி தந்தாய்
என் அருமை அம்மா

மறந்துவிட்டு


ஒவ்வொரு பிறப்புக்குள் இறப்பு இருக்கிறது
ஒவ்வொரு மனிதனுக்குள் கோபம் இருக்கிறது
ஒவ்வொரு சந்தோஷத்திற்குள் துக்கம் இருக்கிறது
ஒவ்வொரு பகலிலும் இரவு இருக்கிறது
நாம் எதிர்பார்பது பிறப்பு, சந்தோஷம், பகல் மட்டும் தான்
இவையில் இறப்பு, துக்கம், இரவு இருப்பதை
மறந்துவிடுகிறோம்

தனிமை துணை


கனவிலும் நினைவிலும் நீ
சொல்லிலும் செயலிலும் நீ
மௌனத்திலும் மொழியிலும் நீ
பேச்சிலும் மூச்சிலும் நீ
தாளத்திலும் ராகத்திலும் நீ
நீ,
என் தனிமைக்கு துணை வருவாயா

தோழியே


என் இருளில் வெளிச்சமாய் நீ வந்தாய்
என் மௌனத்தில் மொழியாய் நீ வந்தாய்
என் தனிமையில் துணையாய் நீ வந்தாய்
என் கண்ணில் ஒளியாய் நீ வந்தாய்
என் இதழ்களில் புன்னகையாய் நீ வந்தாய்
உன்னை மறக்கவோ பிரியவோ இயலுமோ
என் உயிர் தோழியே!!!

உன்மை என்பது பொய்


சூரியனும் கடலும் முத்தமிடுவது பொய்
வானமும் மேகமும் ஒன்றாய் இருப்பது பொய்
ஒன்றாக தெரியும் அருந்ததி பொய்
கடலில் நதிகள் பொய்
என்னோடு இருக்கும் அனைவரும் பொய்

தனிமை அழகு


பாலைவனத்திற்கு தனி மரம் அழகு
நீலக்கடலில் தனித் தீவு அழகு
இருளுக்குத் தனி ஜோதி அழகு
வானத்திற்குத் தனி மின்னல் அழகு
தண்ணீருக்குத் தனித் தாமரை அழகு
எனக்குத் தனிமை அழகு

உண்மையா பொய்யா


தாயின் சாபம் பலிக்காது
தந்தையின் அடி வலிக்காது
நண்பர்களின் பிரிவு தொடராது
காதலரின் கோபம் நீடிக்காது

வரம் வேண்டும்


நகமும் சதையும் போல், கையில் ரேகை போல்
நீயும் நானும் பிரியாத வரம் வேண்டும்
வானமும் மேகமும் போல், தண்ணீரும் மீனும் போல்
நீயும் நானும் பிரியாத வரம் வேண்டும்
ஆனால் நீயோ,
நீயும் பணமும் பிரியாத வரம் வேண்டும்
என்று விலகிவிட்டாய்

Wednesday, December 16, 2009

பிரிவு-பிரிக்கலாம்


When I was in Mepco I stayed in hostel for the first time and I missed my daddy so much. That is when i wrote this.....

உங்களிடம் இருந்து விலகி இருந்தபோது
உணர்ந்தேன் உங்கள் கருணையை
உங்களிடம் இருந்து பிரிந்த போது
உணர்ந்தேன் ஏக்கத்தை
உங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்தபோது
உணர்ந்தேன் உங்கள் பாசத்தை
இப்படி,
பிரிவு நம்மை நெருங்கச் செய்தாலும்
ஆனால்,
இந்த பிரிவு நீடித்தால் நீங்கள் என்னை
பிரிய நேரிடும்!